IPL 2021 ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய கெய்ல்..! KKR - PBKS அணிகளின் உத்தேச ஆடும் லெவன்.. ஆகாஷ் சோப்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Oct 1, 2021, 2:52 PM IST
Highlights

கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அந்த அணிகளை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும்.

4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறுவதற்கு கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் இருந்தாலும், கேகேஆர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பிளே ஆஃபிற்கான வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆரும் பஞ்சாப் கிங்ஸும் இன்று மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த நிலையில், டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக, ஐபிஎல் பயோ பபுளிலிருந்து வெளியேறியுள்ளார். டி20 உலக கோப்பைக்கு முன் சிறிய ஓய்வு எடுத்துவிட்டு, உலக கோப்பைக்கு தயாராவதற்காக கெய்ல் விலகியுள்ளார். எனவே இன்று கேகேஆருக்கு எதிரான போட்டியில் கெய்ல் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக மந்தீப் சிங்கை எடுக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், ஷமி, ரவி பிஷ்னோய், நேதன் எல்லிஸ்.

கேகேஆர் அணியில் சுனில் நரைனுக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் சேர்க்கப்படலாம் என்று சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன்/சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா.

click me!