டி20 உலகக் கோப்பை 2024 மீது குறி வைக்கும் டீம் இந்தியா; ஓய்வில்லாமல் விளையாட ரெடியா?

By Rsiva kumar  |  First Published Jul 3, 2023, 10:39 PM IST

வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், டீம் இந்தியா அதற்காக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.


உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா தனது முழு கவனத்தையும் டி20 உலகக் கோப்பை மீது செலுத்துகிறது.

சேலம் ஸ்பார்டன்ஸ் 160 ரன்கள் குவிப்பு: வெற்றிக்காக போராடும் திண்டுக்கல் டிராகன்ஸ்!

Tap to resize

Latest Videos

டிசம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கான மிஷன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் ஜனவரி – மார்ச் மாதங்களில் நடக்கிறது. ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!

இதே போன்று செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடைசியாக அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!

ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தங்கள் கவனத்தை டி20 போட்டிகளில் மட்டுமே செலுத்துகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அமெரிக்காவிலிருந்து டிராபியை வீட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன.

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆனால், தற்போது இந்திய அணியின் முழு கவனம் முழுவதும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மீது செலுத்தியுள்ளது. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி ஓய்வில்லாமல் அடுத்தடுத்த டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!