திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 160 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் நடந்து முடிந்த போட்டிகளின் படி, லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் டிஎன்பிஎல் தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து தற்போது நடந்து வரும் 26ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின.
கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?
இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் எஸ் அரவிந்த் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கவின் 25 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!
இதையடுத்து வந்த சன்னி சந்து அதிரடியாக ஆடினார். அவர் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் எடுக்கவே, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சு தரப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி மற்றும் சுபோத் பதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையத்து 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!