“Thank you very much".. தோனி விவகாரத்தில் சாஸ்திரி அதிரடி

By karthikeyan VFirst Published Jan 25, 2020, 11:42 AM IST
Highlights

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய தோனி, அதன்பின்னர் ஓய்வும் அறிவிக்காமல், தனது எதிர்கால திட்டம் குறித்து பிசிசிஐ-க்கும் தெரிவிக்காமல் இருந்துவந்தார். 

உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர், கடந்த ஆறு மாதங்களாக தோனி ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. உலக கோப்பைக்கு அடுத்து இந்திய அணி மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை விடுவித்துக்கொண்ட தோனி, அதன்பின்னர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

இந்நிலையில்,  2020ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ. அதில் தோனியின் பெயர் இல்லவே இல்லை. எனவே தோனி இனிமேல் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பில்லை. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடினால்தான், அந்த வீரரின் பெயர், ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறும். தோனி கடந்தன் 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. எனவே அவரது பெயரை 2020ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது பிசிசிஐ. 

அதனால் தோனி இனிமேல் இந்திய அணியில் ஆட வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அருமையாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளிலும் அவர் தான் விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார். எனவே இனிமேல் இந்திய அணியில் தோனிக்கு வேலையில்லை. 

Also Read - அருமையான ரன் அவுட் சான்ஸை அம்போனு விட்டு காமெடி பண்ண நியூசிலாந்து வீரர்கள்.. வைரல் வீடியோ

இந்நிலையில், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்துவந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இப்போதும் தோனி குறித்து பேசியுள்ளார். தோனி குறித்து பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, ஐபிஎல்லில் தோனி கண்டிப்பாக ஆடுவார். அவரை அனைவருக்குமே நன்றாக தெரியும். யார் என்ன கருத்து சொன்னாலும், கடைசியில் அவர் என்ன சொல்கிறார், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதே முக்கியம். அவர் மிகவும் நேர்மையானவர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென தான் ஒதுங்கினார். அவர் ஒன்றும் 100 டெஸ்ட் போட்டிகள் ஆடிவிடவில்லை. அவர் வேண்டுமென்றே கஷ்டப்பட்டெல்லாம் ஒரு விஷயத்தில் தன்னை திணித்துக்கொள்ள மாட்டார். அவர் ஐபிஎல்லை எதிர்நோக்கியிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அவர் அதற்காக, பயிற்சியை தொடங்கிவிட்டாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் ஐபிஎல்லில் ஆடும்போது, இது ஒத்துவராது என்று அவர் கருதினால், உடனடியாக “Thank you very much” என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார்.

click me!