
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. அதன் பிறகு ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் அவரை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்தது. ஆனால், எப்போது வரையிலும் என்று அறிவிக்கவில்லை. எனினும், 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் வரையில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தென் ஆப்பிரிக்கா தொடர் மூலமாக பயணத்தை ராகுல் டிராவிட் தொடங்க இருக்கிறார்.
தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இந்த நிலையில், தனது மகன் கிரிக்கெட் விளையாடுவதை மனைவி விஜேதா உடன் நேரில் கண்டு ரசித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் மகன் கூச் பெஹார் டிராபி தொடரில் கர்நாடகா அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று SNRW மைதானத்தில் கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டரான சமித், 5 ஓவர்கள் வீசி விக்கெட் இழப்பின்றி 2 மெய்ண்டகள் உள்பட 11 ரன்கள் கொடுத்துள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் உத்தரகாண்ட் அணியானது, கேப்டன் ஆரவ் மகாஜனின் சதத்தால் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் குவித்தது. இதில், மகாஜன் 236 பந்துகளில் 18 பவுண்டரிகள் உள்பட 127 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியை ராகுல் டிராவிட் தனது மனைவி விஜேதாவுடன் தரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக ஹிமாச்சல் பிரதேச அணிக்கு எதிராக சமித் 84 பந்துகளில் 55 ரன்னும், 5 பந்துகளில் 2 ரன்னும் எடுத்தார். இந்தப் போட்டியில் கர்நாடகா அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இதே போன்று டெல்லிக்கு எதிராக 122 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் கர்நாடகா அணியானது இன்னிங்ஸ் மற்றும் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வேயும் ஒரு கிரிக்கெட் வீரர். அவர் U14ல் கர்நாடகா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே கிளென் மேக்ஸ்வெல் தான்: நெட்டிசன்கள் கருத்து