ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ருத்ராஜ் கெய்க்வாட் 32 ரன்களும் எடுத்தனர். ஜித்தேஷ் சர்மா 35 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
கிளென் மேக்ஸ்வெல் போன்று அதிரடி காட்ட ஆஸ்திரேலியா அணியில் யாரும் இல்லை. டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் சேர்த்து அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் பிலிப் 8 ரன்னும், பென் மெக்டெர்மோட் 19 ரன்னிலும், ஆரோன் ஹார்டி 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 19 ரன்களில் நடையை கட்ட, மேத்யூ ஷார்ட் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மேத்யூ வேட் கடைசி வரை போராடியும் எந்த பலனும் இல்லை. அவர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகலை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்களில் தோற்றது.
India vs Australia 4th T20 Match: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி – இந்தியா 179 ரன்கள் குவிப்பு!
இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றிய மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 3 ஆம் தேத்தி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.