
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலமாக 10 அணியிலும் மொத்தமாக 77 வீரர்களின் தேவை உள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளார்கள். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆனால், மினி ஏலத்தில் குறைவான அளவில் தான் வீரர்களின் இறுதி பட்டியலானது வெளியிடப்படும்.
அடிப்படை விலை ரூ.2 கோடி:
ஐபிஎல் மினி ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களின் அதிகபட்ச விலை ரூ.2 கோடியாகும். இதில் ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்கூர், கேதர் ஜாதவ், ஹாரி ஃப்ரூக், டக்கெட், கிறிஸ் வீக்ஸ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கெரால்டு கோட்ஸி, லாக்கி ஃபெர்குசன், ஏஞ்சலோ மேத்யூஸ், டேவிட் வில்லி, வான் டெர் டூசென், ரிலீ ரோசோவ், அடில் ரஷீத் உள்பட மொத்தமாக 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அடிப்படை விலை ரூ.1.50 கோடி
இதையடுத்து ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் முகமது நபி, மோய்சஸ் ஹென்ரிக்ஸ், கிறிஸ் லீன், கேன் ரிச்சர்ட்சன், டானியல் சாம்ஸ், டாம் கரன், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான், தைமல் மில்ஸ், பில் சால்ட், கோரி ஆண்டர்சன், கொலின் முன்ரோ, ஜிம்மி நீஷன், டிம் சவுதி, வணிந்து ஹசரங்கா, ஜேசன் ஹோல்டர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
அடிப்படை விலை ரூ.1 கோடி:
இதே போன்று ஒரு கோடிக்கான பட்டியலில் ஆஷ்டன் அகர், சாம் பில்லிங்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மார்டின் குப்தில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், டுவைன் பிரிட்டோரியஸ், டேவிட் வீசி, அல்சாரி ஜோசஃப், ரோவ்மன் பவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அடிப்படை விலை ரூ.50 லட்சம்:
உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆல் ரவுண்டராக வளம் வந்த நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா தனது பெயரை ரூ.50 லட்சத்திற்கு முன்பதிவு செய்து வைத்துள்ளார்.
India vs Australia 4th T20 Match: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி – இந்தியா 179 ரன்கள் குவிப்பு!