IPL 2025,Rajasthan Royals: 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பும் ராகுல் டிராவிட்?

By Rsiva kumar  |  First Published Jul 23, 2024, 12:47 PM IST

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சென்ற இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 27 ஆம் தேதி தொடங்கும் இலங்கை தொடரானது ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

Olympics 2024:பதக்க வேட்டைக்காக பாரிஸ் வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு – பிவி சிந்து உள்பட 49 வீரர்கள் வருகை

Tap to resize

Latest Videos

முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெறு ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் 28 பதக்கங்களை குவித்த நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் உடல் அமைப்பு பற்றிய அறிவியல் கூற்று

எனினும், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் இல்லாத நிலையில் அந்த அணிகளின் உரிமையாளர்கள் ராகுல் டிராவிட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கவுதம் காம்பீர் இந்திய அணிக்கு திரும்பிய நிலையில், ராகுல் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராக்க கேகேஆர் அணி திவீரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

யார் இந்த அபிஷேக் நாயர்? இந்திய அணியில் இணைந்த கேகேஆர் துணை பயிற்சியாளர்!

இதே போன்று தான் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக இந்தியர் ஒருவர் தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று அந்த அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஆலோசகராக இருந்த ராகுல் டிராவிட் அந்த அணிக்கே திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசராக ராகுல் டிராவிட் இருந்துள்ளார். அதே போன்று 2016 ஆம் ஆண்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.

இலங்கை சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் – தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்கும் கவுதம் காம்பீர்!

எனினும் 2025 மெகா ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநரான குமார் சங்கக்காரா உடன் இணைந்து தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அணியில் இடம் பெற்று வீரர்களை ஏலம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!