#INDvsENG குவாரண்டின் முடிந்து களத்தில் இறங்கி கலக்கிய இந்திய வீரர்கள்..!

Published : Feb 02, 2021, 10:26 PM IST
#INDvsENG குவாரண்டின் முடிந்து களத்தில் இறங்கி கலக்கிய இந்திய வீரர்கள்..!

சுருக்கம்

ஆறு நாட்கள் குவாரண்டின் முடிந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.  

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி வரும் ஐந்தாம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேரடியாக சென்னை வந்த இங்கிலாந்து வீரர்கள், ஒரு வாரம் குவாரண்டினில் இருந்து, குவாரண்டின் முடிந்து கடந்த ஜனவரி 30ம் தேதி பயிற்சியை தொடங்கினர்.

இந்நிலையில், இந்திய வீரர்கள் ஆறு நாட்கள் குவாரண்டின் முடிந்து பிப்ரவரி 2ம் தேதி பயிற்சியை தொடங்கினர். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஃபைனலில் இடம்பிடிக்கப்போகும் அணியை தீர்மானிக்கும் முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, இஷாந்த் சர்மா, ரஹானே, ஜடேஜா ஆகிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!