இந்திய அணிக்கு பயம் காட்டிய சிக்கந்தரின் விக்கெட்டை கொண்டாடாமல் பாராட்டி அனுப்பிய இந்தியவீரர்கள்! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Aug 23, 2022, 5:36 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணிக்கு பயம் காட்டிய சிக்கந்தர் ராஜாவின் விக்கெட்டை கொண்டாடாமல், அவரை இந்திய வீரர்கள் பாராட்டி தட்டி கொடுத்த அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

இந்திய அணி  ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி தொடரை வென்றது.

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால் (130) 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த ஷுப்மன் கில்..!

290 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராஜா அபாரமாக ஆடி சதமடித்தார். 95 பந்தில் 115 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சிக்கந்தர். கடைசி 9 பந்தில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்கந்தர் ஆட்டமிழந்தார். உண்மையாகவே சிக்கந்தர் ராஜா களத்தில் நின்றவரை ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது.

அப்படியான சூழலில் 49வது ஓவரின் 4வது பந்தில் சிக்கந்தர் ராஜாவை 115 ரன்களுக்கு வீழ்த்தினார் ஷர்துல் தாகூர். சிக்கந்தர் லாங் ஆனில் தூக்கியடித்த பந்தை அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் ஷுப்மன் கில்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு

இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த விக்கெட் அது. ஆனாலும் இந்திய வீரர்கள் சிக்கந்தரின் விக்கெட்டை கொண்டாடாமல், சிக்கந்தர் ராஜாவை தட்டிக்கொடுத்து பாராட்டி அனுப்பினர். சிக்கந்தர் ராஜா ஆட்டமிழந்தபின்னர், இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் ஓடிவந்து சிக்கந்தர் ராஜாவை தட்டிக்கொடுத்து பாராட்டினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

First with the bat and then with a diving catch, this man won our hearts more than once today 😍

How good was this effort from to dismiss the dangerous Sikandar Raza? 🤩💯 pic.twitter.com/u5snCqECBw

— Sony Sports Network (@SonySportsNetwk)
click me!