
இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்ய நண்பர்களான இவர்கள், சிறுவயது முதல் ஒன்றாக கிரிக்கெட் ஆடியவர்கள். சச்சின் டெண்டுல்கர் - வினோத் காம்ப்ளி இணைந்து அடித்த 664 ரன்கள் தான் நீண்ட நாட்களாக பள்ளியளவில் ரெக்கார்டாக இருந்தது. ஒன்றாக வளர்ந்த இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் ஆடினர்.
1991ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வினோத் காம்ப்ளி, 2000ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 1084 மற்றும் 2477 ரன்கள் அடித்துள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் வினோத் காம்ப்ளி ஆடவில்லை. வினோத் காம்ப்ளி சிறந்த வீரராக இருந்தாலும், அவரது நடத்தை காரணமாக இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. அவர் நல்ல ஃபார்மில் இருந்தபோதே கிரிக்கெட்டை விட்டு ஒதுங்க வேண்டியதாயிற்று.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து கோலியை தூக்கி எறிய துணிந்த தேர்வாளர்கள்..! விரைவில் அணி அறிவிப்பு
இந்நிலையில், அண்மையில் மிட் டே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தான் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்தார். பிசிசிஐ கொடுக்கும் பென்சன் தொகையை மட்டும் வைத்தே குடும்பம் நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசியிருந்த வினோத் காம்ப்ளி, நான் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் பிசிசிஐ கொடுக்கும் பென்சனை வைத்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதற்காக பிசிசிஐக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த பென்சனை வைத்துத்தான் எனது குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் என்னை பயிற்சியாளர் பொறுப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நேரடியாக வாய்விட்டே வாய்ப்பு கேட்டார்.
இதையும் படிங்க - சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த ஷுப்மன் கில்..!
ஆனால் அவர் வெளிப்படையாக கேட்டும் கூட, கிரிக்கெட் சங்கம் உதவ முன்வந்ததாக தெரியவில்லை. ஆனால் மகாராஷ்டிரா தொழிலதிபர் வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்துள்ளார். மகாராஷ்டிரா தொழிலதிபர் சந்தீப் தோரட் என்பவர் வினோத் காம்ப்ளிக்கு ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை தருவதாக கூறியிருக்கிறார். அந்த தொழிலதிபரால் வினோத் காம்ப்ளியின் பொருளாதார பிரச்னையைத்தான் தீர்த்துவைக்க முடியுமே தவிர, கிரிக்கெட் தொடர்பான வாய்ப்பை பெற்றுத்தர முடியாது.
வினோத் காம்ப்ளி எதிர்பார்ப்பது கிரிக்கெட்டில் பயிற்சியாளர் பொறுப்பா? அல்லது பொருளாதார பிரச்னை தீர்ந்தாலே போதுமா என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும். பொருளாதார பிரச்னைக்கு மராத்தி தொழிலதிபர் தீர்வு அளித்துவிட்டார்.