நியூசிலாந்திற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பேட் இல்லாமல் ஓடிச் சென்று எல்லைக் கோட்டை கையாள் தொடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கபடி கபடி என்று இந்திய வீரர் ஷிகர் தவான் நக்கல் செய்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று கிறிஸ்சர்ஜில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பவுலிங் செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் தொடக்க வீரர் சைம் ஆயுப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 19 ரன்கள் எடுக்க, ஃபகர் ஜமான் 9 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
ஜப்பானிடம் தோல்வி; பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்தியா!
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பேட்டை தவறவிட்ட நிலையில் ஓடிச் சென்று கையால் கிரீஸை தொட்ட புகைப்படத்தை பகிர்ந்த இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கபடி கபடி என்று நக்கல் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட், வில் யங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பவுலர்களுக்கு தண்ணி காட்டினர். மிட்செல் 44 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்தார்.
பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!
கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உள்பட 70 ரன்கள் சேர்க்க, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.