இலங்கை தொடரிலிருந்து கடைசி நேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட பும்ரா!

By Rsiva kumarFirst Published Jan 9, 2023, 2:21 PM IST
Highlights

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, 2ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரையும் 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

உண்மையாவா? கடந்த 3 வருடத்தில் ரோகித் சர்மா, பும்ரா, கோலி இணைந்தது 2 ஒரு நாள் போட்டியில் மட்டுமே!

டி20 போட்டி தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதில், பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவும் அணியில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

ஓரங்கப்பட்ட ஷிகர் தவான் ஒரு நாள் போட்டியில் நம்பர் ஒன் இடம்!

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து பும்ரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியின் போது காயம் ஏற்படவே அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரெலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் அவர் விளையாடவில்லை. இதையடுத்து, காயத்திலிருந்து பும்ரா குணமடைந்துவிட்டதாகவும், தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இலங்கைக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் 2ஆவது இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்!

அதன்படியும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்றார். இந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமி ஊழியர்களின் பரிந்துரையின் பேரில் பும்ரா தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் உலகக் கோப்பை ஆகியவற்றை கருத்தில் இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் மனைவி டேவிஷா ஷெட்டியின் ஃபர்ஸ்ட் மீட்டிங் எப்போது தெரியுமா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பும்ரா பங்கேற்பார் என்று தெரிகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

click me!