ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன் துபாய் சென்று அங்கு கோல்ஃப் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் 17 பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. மாறாக, பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல் மற்றும் முதுகு வலி காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத ஷ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது.
எனினும், கேஎல் ராகுல் ஆசிய கோப்பை முதல் 2 லீக் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆதலால், சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருந்தார். இதையடுத்து கேஎல் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டிக்காக இலங்கை புறப்பட்டு வந்த நிலையில், சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் இலங்கையிலிருந்து நாட்டிற்கு அனுப்பி வைத்தது.
Jasprit Bumrah: தந்தையான பும்ராவை பாராட்டி பரிசு பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி; வைரலாகும் வீடியோ!
இதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வந்த சஞ்சு சாம்சன், துபாய் சென்றுள்ளார். அங்கு கோல்ஃப் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றுப் போட்டி நடந்தது. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
Sanju Samson playing Golf at Dubai. pic.twitter.com/8fwGKqVHvZ
— Johns. (@CricCrazyJohns)
இதன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் சேர்த்தது. இதில், ரோகித் சர்மா 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி களமிறங்கினார். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிறகு ஐபிஎல் தொடருக்கு பின், கேஎல் ராகுல் நேற்றைய போட்டியில் களமிறங்கினார். அவர், 17 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்திய அணி 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கீடு இருந்தது.
India vs Pak: ரிசர்வ் டே – நாளைக்கு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி!
இதன் காரணமாக போட்டியானது ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மீண்டும் இன்று நடக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடக்க, சஞ்சு சாம்சன் துபாயில் கோல்ஃப் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.