புதிய வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்த தினேஷ் கார்த்திக் – புதிய தொடக்கம் என்று இன்ஸ்டாவில் பதிவு!

By Rsiva kumarFirst Published Jan 23, 2024, 8:33 PM IST
Highlights

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தனது புதிய வீட்டில் பால் காய்ச்சி கிரஹப்பிரவேசம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1025 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 129 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 கேட்சுகளும், 6 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார்.

இதே போன்று 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1752 ரன்கள் குவித்துள்ளார். இதில், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக, 64 கேட்சுகளும், 7 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார். மேலும், 56 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 672 ரன்கள் எடுத்துள்ளார். அதிகளவில் இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும், இதுவரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

Latest Videos

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர்த்து கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் தனது புதிய வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புதிய தொடக்கம் மற்றும் நேசத்திற்குரிய நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் பகிர்ந்த புகைப்படங்களில் மனைவியுடன் மாலையும் கழுத்துமாக ஹோமத்தில் அமர்ந்திருந்தனர். ஹோமம் முடிந்த பிறகு மனைவி பால் காய்ச்சுவதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!