பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் பிளாக் கோட் சூட்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

By Rsiva kumar  |  First Published Jan 23, 2024, 6:42 PM IST

ஹைதராபாத்தில் நடக்கும் பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர் பிளாக் அண்ட் பிளாக் உடையில் கோட் சூட் அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.


சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதுகளுடன் இணைந்து ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலங்களான ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், அக்‌ஷர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஜித்தேஷ் சர்மா, குல்தீப் யாதவ், கேஎஸ் பரத், முகமது சிராஜ், சுப்மன் கில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்று இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் கோட் சூட் அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. அவர் தனிப்பட்ட காரணத்திற்காக குடும்பத்துடன் நேரம் செலவிட சென்றுள்ள நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிகர் தவான் இந்திய அணியுடன் பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

A picture filled with bright smiles 😁 are HERE for the 😎 pic.twitter.com/E1lGcXu3vT

— BCCI (@BCCI)

 

click me!