டி20யைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியை அறிவித்த ஐசிசி – இதுல ரோகித் சர்மா கேப்டன்!

By Rsiva kumar  |  First Published Jan 23, 2024, 3:28 PM IST

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியாக ரோகித் சர்மா தலைமையிலான சிறந்த கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது.


கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில் இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகள், ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக உலகக் கோப்பை சாம்பியனானது. இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் முகமது ஷமிக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில், ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 1255 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அணியை சிறப்பாக வழிநடத்தி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். ஆதலால், ஐசிசி அவரை கேப்டனாக அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ரோகித் சர்மாவைத் தொடர்ந்து 2ஆவது இந்திய வீரராக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர், கடந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 1584 ரன்கள் குவித்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட் 3ஆவது வீரராக ஐசிசி அறிவித்த பிளேயிங் 11ல் இடம் பெற்றுள்ளார்.

விராட் கோலி 1377 ரன்கள் உடன் 4ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 765 ரன்கள் குவித்துள்ளார். அதோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்தார். அடுத்ததாக டேரில் மிட்செல் 1204 ரன்கள் உடன் 5ஆவது இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் இடம் பெற்றுள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் மார்கோ யான்சென், ஆடம் ஜம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் கனவு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கனவு அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ஆடம் ஜம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி.

 

ICC ODI team of the year 2023:

Rohit (C), Gill, Head, Kohli, Mitchell, Klaasen, Jansen, Zampa, Siraj, Kuldeep, Shami pic.twitter.com/f8vm2OCyvb

— Johns. (@CricCrazyJohns)

 

click me!