நீங்க சும்மாவே இருக்கமாட்டீங்களா? இப்போ யாரு? ஜூனியர் என் டி ஆருடன் போட்டோ எடுத்த இந்தியன் பிளேயர்ஸ்!

Published : Jan 17, 2023, 10:28 AM IST
நீங்க சும்மாவே இருக்கமாட்டீங்களா? இப்போ யாரு? ஜூனியர் என் டி ஆருடன் போட்டோ எடுத்த இந்தியன் பிளேயர்ஸ்!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நடிகர் ஜூனியர் என் டி ஆருடன் போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்ற கணக்கிலும் இழந்து வெளியேறியது. இதையடுத்து, இந்தியா வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்க இருக்கிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்க இருக்கிறது.

டீம் மேட்டின் காதலியுடன் ஆபாசமாக பேசும் பாபர் அசாம்: சர்ச்சையான வீடியோ!

இதற்கான இந்திய அணியினர் ஹைதராபாத் சென்றுள்ளனர். அங்கு, ஊர் சுற்றி வந்த இந்திய அணியினர், தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில், சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சகால், இஷான் கிஷான், ஷர்துல் தாகூர், சுப்மன் கில் ஆகியோர் அந்தப் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!

இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி: சவால்களுக்கு தயாராக இருக்கிறேன்: ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவு!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்

ஜனவரி 15 என்றாலே வெறியாட்டம் ஆடும் கோலி..! பிரமிக்க வைக்கும் கோலியின் ஜனவரி 15 வரலாறு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் கூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகால், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!
Virat Kohli: 4 ஆண்டுகளுக்கு பிறகு 'கிங்' கோலி நம்பர் 1.. யாரும் நெருங்க முடியாத மெகா சாதனை!