சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

By Rsiva kumarFirst Published Jan 15, 2023, 1:42 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடியது. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

டி20 போட்டி தொடங்குவதற்கு சரியாக 1 மணி நேரத்துக்கு முன்னதாக ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முகமது ரிஸ்வான்!

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சகால் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BBL: 30 யார்டு வட்டத்தையே தாண்டாத பந்துக்கு சிக்ஸர் கொடுத்த அம்பயர்..! என்ன காரணம்..? வைரல் வீடியோ 

இதே போன்று இலங்கை அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆசென் பந்தாரா மற்றும் ஜெப்ரே வண்டெர்சே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். துனித் வெல்லாலேஜ் மற்றும் தனஞ்செயா டி சில்வா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகதும் ஷமி, 

Hockey World Cup 2023: கொரியாவை வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி..! புள்ளி பட்டியல் அப்டேட்

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, நுவானிடு பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஆசென் பந்தாரா, சரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வணிந்து ஹசரங்கா, ஜெப்ரே வண்டெர்சே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லகிரு குமாரா

click me!