SA20: ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு அடுத்தடுத்த தோல்விகள்..! எம்.ஐ கேப்டவுன் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 15, 2023, 12:12 AM IST
Highlights

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி பெற்றது.
 

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் எம்.ஐ கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

எம்.ஐ கேப்டவுன் அணி:

டிவால்ட் பிரெவிஸ், ரியான் ரிக்கெல்டான், கிராண்ட் ராயலோஃப்சன் (விக்கெட் கீப்பர்), ராசி வாண்டர்டசன், சாம் கரன், ஜார்ஜ் லிண்டே, ஒடீன் ஸ்மித், ரஷீத் கான் (கேப்டன்), டிலானோ பாட்ஜியடர், ககிசோ ரபாடா, வக்கார் சலாம்கீல்.

BBL: 30 யார்டு வட்டத்தையே தாண்டாத பந்துக்கு சிக்ஸர் கொடுத்த அம்பயர்..! என்ன காரணம்..? வைரல் வீடியோ

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:

ஜே மலான், ரீஸா ஹென்ரிக்ஸ், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), கைல் வெரைன் (விக்கெட் கீப்பர்), லியுஸ் டு ப்ளூய், டோனாவான் ஃபெரைரா, ரொமாரியோ ஷெஃபெர்டு, ஜார்ஜ் கார்ட்டான், அல்ஸாரி ஜோசஃப், ஜெரால்ட் கோயட்ஸீ, ஆரோன் ஃபாஞ்சிஸோ.

முதலில் பேட்டிங் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேப்டவுன் பவுலர்களிடம் மண்டியிட்டு சரணடைந்தனர். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர் சூப்பர் கிங்ஸ் வீரர்கள். அந்த அணியில் அதிகபட்சமாகவே  லியுஸ் 21 ரன்கள் தான் அடித்தார். ஜே மலான் 16 ரன்களும், கார்ட்டான் 13 ரன்களும் அடித்தனர். ஹென்ரிக்ஸ்(2), கேப்டன் டுப்ளெசிஸ்(8), கைல் வெரைன் (4) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்தது.

கேப்டவுன் அணியில் அபாரமாக பந்துவீசிய ரபாடா, ரஷீத் கான், லிண்டே, ஒடீன் ஸ்மித் ஆகிய நால்வரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

106 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய எம்.ஐ கேப்டவுன் அணியின் தொடக்க வீரர்கள் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் ரியான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 65 ரன்கள் அடித்தனர். ரியான் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடித்து ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 34 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்தார். இலக்கு எளிதானது என்பதால் அதன்பின்னர் மற்றுமொரு விக்கெட் விழுந்தாலும், வாண்டர்டசனும் சாம் கரனும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர்.  வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் கேப்டவுன் அணி வெற்றி பெற்றது.

U19 Womens T20 World Cup: ஷ்வேதா செராவத் அபார பேட்டிங்! தென்னாப்பிரிக்காவை அசால்ட்டா அடித்து காலிசெய்த இந்தியா

முதல் போட்டியில் டர்பன் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, அதன்பின்னர் பார்ல் ராயல்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது.
 

click me!