Latest Videos

IND vs AFG T20 WC 2024: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் – சிராஜ் நீக்கம், குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பு!

By Rsiva kumarFirst Published Jun 20, 2024, 8:22 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 சுற்று போட்டிகள் தற்போது பார்படாஸில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சுழற்பந்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ஹஸ்ரதுல்லா ஜஸாய், குல்பதீன் நைப், நஜிபுல்லா ஜத்ரன், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

இந்த தொடரில் குரூப் சுற்று போட்டியில் இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றது. மேலும், ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 8 டி20 போட்டிகளில் 7ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், 2ல் வெற்றி பெற வேண்டும். அப்படி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் பிடித்தால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!