வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆவது நாள் மழையால் ரத்து செய்யப்படவே இந்தப் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசோவில் நடந்தது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு நடத்திய கிளென் மேக்ஸ்வெல்; வைரலாகும் புகைப்படம்!
இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களும் எடுத்தனர். பின்னர் 183 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், இந்தியா 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்யவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாட தடை?
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. இதில், 4ஆம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், டெகனரைன் சந்தர்பால் 24 ரன்களும், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்தியா: இனிமேல் 5 மாசத்திற்கு டெஸ்ட் இல்லையா?
இந்த நிலையில், 5ஆவது நாளான நேற்றைய போட்டி மோசமான வானிலை மற்றும் மழையின் காரணமாக தடைப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் உணவு இடைவேளை வந்தது. அதன் பிறகு மேகமூட்டம், மோசமான வானிலை காரணமாக 5ஆவது நாள் முழுவதும் போட்டி நடக்காமல் போய்விட்டது. மறுநாள் நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், அதிக செலவு ஏற்படும் சூழல் காரணமாக போட்டி டிராவில் முடிக்கப்பட்டது.
விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்து 2ஆவது இடத்திற்கு முன்னேறிய இஷான் கிஷான்!
இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தான் 12 புள்ளிகளுடன் ஒரு வெற்றியுடன் முதலிடத்திலும், இந்தியா 16 புள்ளிகளுடன் ஒரு வெற்றியுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது.
மழையால் ரத்தான 5 ஆம் நாள்: கடைசியாக டிராவில் முடிந்த 4ஆவது டெஸ்ட்!
இந்தப் போட்டி டிரா செய்யப்பட்ட நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்று கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது.
ACC Mens Emerging Asia Cup 2023 Final: தேசிய கொடியில் மோடின்னு எழுதி காண்பித்த ரசிகர்களால் சர்ச்சை!