Womens T20I Tri-Series: முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த இந்திய பெண்கள் அணி!

By Rsiva kumarFirst Published Jan 20, 2023, 9:36 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

தென் ஆப்பிரிக்கா, வெஸ் இண்டீஸ் மற்றும் இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. மூன்று அணிகள் பங்கு பெறும் இந்த முத்தரப்பு டி20 தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையில் நடக்கிறது. முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணியும், தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

Hockey World Cup 2023: வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

அதன்படி முதலில் ஆடிய இந்திய பெண்கள் அணியில் தொடக்க வீராங்கனை யாஸ்டிகா படியா 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 33 ரன்களில் வெளியேறினார். அமன்ஜோத் கௌர் நிலைத்து நின்று ஆடி 41 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியில் லாபா 2 விக்கெட்டும், அயபோங்கா காகா, காப் மற்றும் டக்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பறினர்.

இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியில் காப், லுஸ், டிரைன் ஆகியோர் ஓரளவு ரன் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சு தரப்பில் இந்திய பெண்கள் அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், வைத்யா 2 விக்கெட்டும், கயக்வாட், ராணா மற்றும் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ

இந்தப் போட்டியில் கௌர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான 2 ஆவது போட்டி நாளை மாலை 6.30 மணிக்கு லண்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!