BPL 2023: இஃப்டிகார் அகமது (100) - ஷகிப் அல் ஹசன் (89) ஜோடி டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை.!

By karthikeyan V  |  First Published Jan 19, 2023, 10:58 PM IST

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஃபார்ச்சூன் பரிஷால் அணி வீரர்கள் இஃப்டிகார் அகமது - ஷகிப் அல் ஹசன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 194 ரன்களை குவித்து, டி20 கிரிக்கெட்டில் 5வது விக்கெட்டுக்கு  அதிகபட்ச ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.
 


வங்கதேச பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடந்த போட்டியில் ஃபார்ச்சூன் பரிஷால் - ராங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஃபார்ச்சூன் பரிஷால் அணி 20 ஓவரில் 238 ரன்களை குவித்தது.

அனாமுல்(14), மெஹிடி ஹசன்(24), இப்ராஹிம் ஜட்ரான்(0), மஹ்மதுல்லா(0) ஆகிய நால்வரும் சீக்கிரம் ஆட்டமிழக்க, 46 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது ஃபார்ச்சூன் அணி. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஷகிப் அல் ஹசன் மற்றும் இஃப்டிகார் அகமது ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி, அதன்பின்னர் விக்கெட்டே இழக்காமல், அதேவேளையில் அதிரடியாக ஆடி இன்னிங்ஸை முடித்தனர்.

Latest Videos

இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்

அதிரடியாக ஆடிய இஃப்டிகார் அகமது சதமடித்தார். 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்தார். ஷகிப் அல் ஹசன் 43 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 238 ரன்களை குவித்தது ஃபார்ச்சூன் அணி. ஷகிப் அல் ஹசனும் இஃப்டிகார் அகமதுவும் இணைந்து 5 வது விக்கெட்டுக்கு 194 ரன்களை குவித்தனர். டி20 கிரிக்கெட்டில் 5வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோரை குவித்த ஜோடி என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் - இஃப்டிகார் அகமது ஜோடி படைத்துள்ளது.

IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ

239 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ராங்பூர் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. 67 ரன்கள் வித்தியாசத்தில் ஃபார்ச்சூன் அணி அபார வெற்றி பெற்றது.

click me!