இதுலாம் கிரிக்கெட்டே இல்ல.. இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jan 19, 2023, 9:28 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷுப்மன் கில்லின் அபாரமான இரட்டை சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்தது. ஷுப்மன் கில் 149 பந்தில் 208 ரன்களை குவித்தார். 

350 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்துஅணி, டேரைல் மிட்செலின் அதிரடியான சதத்தால் (140) இலக்கை நெருங்கினாலும், எட்ட முடியவில்லை. 50 ஓவரில் 337 ரன்களை குவித்து 12 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

IPL 2023: இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்ட தோனி.. வைரல் வீடியோ

இந்த போட்டியில் ஷுப்மன் கில்லுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியது. 28 ரன்களுக்கு இன்னிங்ஸின் 40வது ஓவரில் ஆட்டமிழந்தார் ஹர்திக் பாண்டியா. டேரைல் மிட்செல் வீசிய பந்து, ஹர்திக் பாண்டியாவின் பேட்டிலும் படவில்லை; ஸ்டம்ப்பிலும் படவில்லை. நியூசி., விக்கெட் கீப்பர் டாம் லேதமின் க்ளௌஸ் பட்டு ஸ்டம்ப்பில் லைட் எரிந்தது. ஆனால் அதற்கு ரிவியூ கேட்டு, அதற்கு தேர்டு அம்பயரும் போல்டு என்று அவுட் கொடுக்க, தேர்டு அம்பயரின் இந்த முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது. விக்கெட் கீப்பரின் க்ளௌஸ் ஸ்டம்ப்பில் பட்டதற்கு தேர்டு அம்பயர் அவுட் கொடுத்தது பெரும் சர்ச்சையானது.

விக்கெட் கீப்பர் டாம் லேதமுக்கு நடந்த உண்மை தெரியும். ஆனால், இருந்தும் கூட அவர் சொல்லவில்லை. அவரை கிண்டலடிக்கும் விதமாகவும், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அவர் பேட்டிங்கின்போது தடுப்பாட்டம் ஆடியபோது பந்தை பிடித்த இஷான் கிஷன் ஸ்டம்ப்பில் அடித்துவிட்டு அப்பீல் செய்தார். ஒருவேளை ஹிட் விக்கெட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் தேர்டு அம்பயரிடம் கள நடுவர்கள் ரிவியூ செய்தனர். அது அவுட்டில்லை என்பது தெரிந்தும்கூட அப்பீல் செய்த இஷான் கிஷனும் கேப்டன் ரோஹித்தும், களநடுவர்கள் தேர்டு அம்பயரிடம் ரிவியூ செய்தபோது கமுக்கமாக நின்றனர். அதை ரிவியூ செய்து தேர்டு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார்.

உங்க டைம் முடிஞ்சுது ஹிட்மேன்! ரோஹித்திடம் இருந்து ODI அணியின் கேப்டன்சியையும் தட்டி தூக்கும் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஷான் கிஷன் அதை செய்திருந்தாலும், அதற்கு அப்பீல் செய்ததும், தேர்டு அம்பயர் ரிவியூ வரை சென்றபோதும், இஷான் கிஷன் மௌனம் காத்ததும் தவறு என்றும், இது கிரிக்கெட் அல்ல என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

click me!