உங்க டைம் முடிஞ்சுது ஹிட்மேன்! ரோஹித்திடம் இருந்து ODI அணியின் கேப்டன்சியையும் தட்டி தூக்கும் ஹர்திக் பாண்டியா

By karthikeyan V  |  First Published Jan 19, 2023, 6:19 PM IST

இந்திய ஒருநாள் அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பிசிசிஐ சீனியர் நிர்வாகி ஒருவரின் கருத்து அதை நிரூபித்துள்ளது.
 


ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன்சியை ஏற்றபோது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல்லில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்ததால், ஒரு கேப்டனாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா பூர்த்தி செய்யவில்லை.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என 2 பெரிய ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோற்று ஏமாற்றமளித்தது. டி20 உலக கோப்பை தோல்விக்கு பின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். டி20 கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, அந்த 2 தொடர்களையும் வென்று கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.

Tap to resize

Latest Videos

பந்து பேட்டிலும் படல; ஸ்டம்பிலும் படல.. பிறகு எப்படி அவுட்? கணவன் ஹர்திக் பாண்டியாவிற்காக பொங்கிய மனைவி நடாசா

இந்திய அணியின் கேப்டன்சிக்கான ரேஸில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை ஓரங்கட்டி கேப்டன்சி இடத்தை பிடித்தார் ஹர்திக் பாண்டியா. 2024 டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் வலுவான அணியாக உருவாக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், ஒருநாள் அணியின் கேப்டன்சியும், இந்தாண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு பின் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடக்கிறது. அதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்காக 20 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, சுழற்சி முறையில் ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகின்றனர். 2011ம் ஆண்டுக்கு பிறகு, அதுவும் இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ப்ரோ, நீதான் கேப்டன்.. என்கிட்ட கேட்குற பார்த்தியா..? மனசுல கவலையை வச்சுகிட்டு ரோஹித்திடம் கலகலத்த இஷான் கிஷன்

இந்த உலக கோப்பைக்கு பின் கேப்டன்சி மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நியூஸ் 18 நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், இப்போதைக்கு ரோஹித் சர்மா தான் கேப்டன். இந்த ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை ரோஹித் சர்மா தான் கேப்டனாக இருந்து வழிநடத்துவார். ஆனால் அதேவேளையில், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் அடுத்த கேப்டன் குறித்து யோசிக்க முடியாது.  ஹர்திக் பாண்டியா கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். இள்ம வீரரான அவர் அனுபவம் அதிகரிக்கும்போது இன்னும் சிறப்பாக செயல்படுவார். எனவே எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக வளர்க்கவேண்டும் என்றார் அவர்.
 

click me!