IND vs SA: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 2 இளம் வீரர்கள் அறிமுகம்

By karthikeyan VFirst Published Oct 6, 2022, 3:54 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. விட்டுவிட்டு பெய்த மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ஒரு மணிக்கு டாஸ் போட்டு ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் 3.30 மணிக்குத்தான் டாஸ் போடப்பட்டது. 3.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. 

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷுப்மன் கில், ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் ஆடுகின்றனர்.

இவர்களில் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர். 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன்  ஆகிய 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடுகிறது. ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகிய 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி ஆடுகிறது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

தென்னாப்பிரிக்க அணி:

ஜே மலான், டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ரபாடா, லுங்கி இங்கிடி, ஷாம்ஸி.
 

click me!