AUS vs WI: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..! ஆட்டநாயகன் ஆரோன் ஃபின்ச்

By karthikeyan VFirst Published Oct 6, 2022, 2:16 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் 16ம் தேதி முதல் நடக்கவுள்ள நிலையில், அதற்காக அங்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 உலக கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

முதல் டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஷ், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

பிரண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், ரேமன் ரைஃபர், யானிக் காரியா, அல்ஸாரி ஜோசஃப், ஷெல்டான் காட்ரெல்.

 முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் மட்டுமே பொறுப்புடன் ஆடி 39 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 3 ரன்னில் அவுட்டானார்.

பிரண்டன் கிங்(12), ரைஃபர் (19), கேப்டன் பூரன்(2), ரோவ்மன் பவல் (7), ஹோல்டர் (13) என அனைவருமே படுமோசமாக சொதப்பினர். பின்வரிசையில் இறங்கிய ஒடீன் ஸ்மித் 17 பந்தில் 27 ரன்கள் அடித்தார். அவர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 145 ரன்கள் அடித்தது.

146 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகிய இருவருமே தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிட்செல் மார்ஷும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இளம் வீரர் கேமரூன் க்ரீன் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடியதன் விளைவாக, கேமரூன் க்ரீனை வார்னருடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு, கேப்டன் ஆரோன் ஃபின்ச் 4ம் வரிசையில் இறங்கினார்.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

தொடக்க வீரரான ஃபின்ச் 4ம் வரிசையில் இறங்கி மிடில் ஓவர்களில் அபாரமாக பேட்டிங் ஆட, மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவருமே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ஃபின்ச், 53 பந்தில் 58 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நல்ல ஃபார்மில் இருக்கும் மேத்யூ வேட் சிறப்பாக பேட்டிங் ஆடி 29 பந்தில் 39 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஆரோன் ஃபின்ச் வென்றார்.
 

click me!