ஏய்ப்பு காட்டும் மழை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி தாமதம்

By karthikeyan VFirst Published Oct 6, 2022, 2:59 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. விட்டு விட்டு பெய்யும் மழையால் ஆட்டம் தாமதமாகியுள்ளது.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கவுள்ளது.

எனவே சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகிய இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஆடுவதற்காக பெரும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக்கொண்டிருந்த நிலையில், லக்னோவில் மழை ஆட்டம் காட்டிவருகிறது.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

ஒரு மணிக்கு டாஸ் போட்டு ஒன்றரை மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒன்றரை மணிக்கு டாஸ் போடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்து சிறிது நேரத்தில் நின்றதால் 2.45 மணிக்கு டாஸ் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. மைதான ஈரம் காய்ந்துவந்த நிலையில், டாஸ் போட தயாரானபோது, 2.45 மணிக்கு மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தாமதமானது.

click me!