
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என ஜெயித்த நிலையில், அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது. வரும் 19ம் தேதி 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திலும், 22ம் தேதி 3வது போட்டி சென்னையிலும் நடக்கின்றன.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்கிறார். மும்பை வான்கடேவில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் மற்றும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது. ஷமி, சிராஜ் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் ஆடுகின்றனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாக ஆடுகின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.