
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவுக்கு சென்று ஆகஸ்ட் பிற்பாதியில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடிவிட்டு நாடு திரும்புகிறது இந்திய அணி.
அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 11 வரை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது இந்தியா. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்தியாவிற்கு வந்து இந்த தொடர்களில் ஆடுகின்றன.
இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க - WI vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்.. 3 வீரர்கள் அறிமுகம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஆடுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர்:
முதல் டி20 - செப்டம்பர் 20 - மொஹாலி
2வது டி20 - செப்டம்பர் 23 - நாக்பூர்
3வது டி20 - செப்டம்பர் 25 - ஹைதராபாத்
இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடர்:
முதல் டி20 - செப்டம்பர் 28 - திருவனந்தபுரம்
2வது டி20 - அக்டோபர் 1 - கவுஹாத்தி
3வது டி20 - அக்டோபர் 3 - இந்தூர்
இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்த பாகிஸ்தான்..! சிக்கலில் இந்தியா
இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 6 - ராஞ்சி
2வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 9 - லக்னோ
3வது ஒருநாள் போட்டி - அக்டோபர் 11 - டெல்லி.