TNPL 2022: சேலம் ஸ்பார்ட்டன்ஸ் படுமோசமான பேட்டிங்.. ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Jul 21, 2022, 9:10 PM IST
Highlights

ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி வெறும் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, 88 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டுகிறது ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சேலத்தில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), அதீக் உர் ரஹ்மான், பி சுகேந்திரன், பி சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), அஜய் கிருஷ்ணா, எம்.எஸ்.சஞ்சய், எம் மதிவாணன்.

இதையும் படிங்க - கேஎல் ராகுலுக்கு அடி மேல் அடி.. காயத்திலிருந்து மீண்டு கொரோனாவிடம் சிக்கிய ராகுல்

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி:

கோபிநாத், அக்‌ஷய் ஸ்ரீநிவாசன், டேரைல் ஃபெராரியோ, ரவி கார்த்திகேயன், எஸ் அபிஷேக், எஸ் கணேஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அஷ்வின் (கேப்டன்), எஸ் பூபாலன், ராஜேந்திரன் கார்த்திகேயன், லோகேஷ் ராஜ், ஜி பெரியசாமி.

முதலில் பேட்டிங் ஆடிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்துடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் அந்த அணியின் ஸ்கோர் உயரவேயில்லை. 

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர் கோபிநாத் தான் அதிகபட்சமாக 24 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே 20 ரன்களை கூட கடக்கவில்லை. மற்றொரு தொடக்க வீரரான அக்‌ஷய் ஸ்ரீநிவாசன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கணேஷ் 11 ரன்களும், கேப்டன் முருகன் அஷ்வின் 13 ரன்களும் அடித்தனர். ரவி கார்த்திகேயன் (2), அபிஷேக்(7), லோகேஷ் ராஜ் (2) ஆகியோர் ஒற்றை இலக்கத்திலும், டேரைல் ஃபெராரியோ 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்த பாகிஸ்தான்..! சிக்கலில் இந்தியா

தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 19.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருச்சி அணியின் கேப்டன் ராஹில் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதீக் உர் ரஹ்மான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெறும் 88 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

click me!