
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் என்று 6 அணிகள் விளையாடின. இதில், லீக் போட்டியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் வெளியேறின.
இதையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், வங்கதேசம் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியதன் மூலமாக இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து இலங்கை 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3ஆவது இடத்திலும் இருந்தன.
Sri Lanka vs Pakistan, Wide: இதெல்லாம் வைடா, நீயெல்லாம் ஒரு நடுவரா? கோபம் கொண்ட இலங்கை ரசிகர்கள்!
இந்த நிலையில் தான் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று இருந்தது. மழை குறுக்கீடு காரணமாக இந்தப் போட்டி 45 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் மழை பெய்த நிலையில், 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் 91 ரன்களும், சதீர சமரவிக்ரமா 48 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர். கடைசியாக இலங்கை அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சரித் அசலங்கா 2 ரன்கள் எடுத்துக் கொண்டு அணியை வெற்றி பெற செய்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இலங்கை 13 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஒரே வருடத்தில் 2 திருமணம்: 2ஆவது முறையாக திருமணத்திற்கு தயாராகும் ஷாஹீன் அஃப்ரிடி!
அதுமட்டுமின்றி நடப்பு சாம்பியன் வேறு. மேலும், 1986, 1997, 2004, 2008, 2014, 2022 என்று 6 முறை ஆசிய கோப்பை சாம்பியனாகியுள்ளது. மாறாக, 7 முறை 2ஆவது இடம் பிடித்துள்ளது. மேலும், 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மூன்று முறை மட்டுமே இலங்கை சாம்பியனாகியுள்ளது.
இதுவரையில் இந்தியா ஆசிய கோப்பையில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது. வரும் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.