IND vs SA: மழையால் கைவிடப்பட்ட கடைசி டி20.. இந்திய மண்ணில் நீடிக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை

Published : Jun 19, 2022, 10:06 PM IST
IND vs SA: மழையால் கைவிடப்பட்ட கடைசி டி20.. இந்திய மண்ணில் நீடிக்கும் தென்னாப்பிரிக்காவின் சாதனை

சுருக்கம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தொடர் 2-2 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடந்தது. 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் 50 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 3.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரவு 9.50 மணி வரை காத்திருந்து பார்க்கப்பட்டது. ஆனால் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டி20 தொடர் 2-2 என சமனடைந்தது. அதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துள்ளன.

இதன்மூலம் இந்திய மண்ணில் டி20 தொடரை இழந்ததில்லை என்ற ரெக்கார்டை தக்கவைத்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக டி20 தொடரை வீழ்த்தும் வாய்ப்பு இந்திய அணிக்கு பறிபோனது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Final: கோப்பை யாருக்கு? RCB vs GT இறுதிப் போட்டி... அனல் பறக்கும் அகமதாபாத்!
Orange Cap Race: ஆரஞ்சு கேப் ரேஸ்: வைபவ் சாதனையை முறியடிப்பார்களா கில், சாய் சுதர்சன்?