SL vs AUS 3வது ODI:ஹெட், ஃபின்ச் அரைசதம்; மேக்ஸ்வெல் அதிரடி ஃபினிஷிங்! இலங்கைக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி

By karthikeyan VFirst Published Jun 19, 2022, 7:01 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 291 ரன்களை குவித்து, 292 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், இன்று 3வது ஒருநாள் போட்டி நடக்கிறது.

கொழும்பில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மிட்செல் மார்ஷ் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஃபின்ச் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுஷேன் 29 ரன்கள் மட்டுமே அடித்தார்.

121 ரன்களுக்கு ஆஸி.,அணி 4 விக்கெட்டுகளை இழக்க, 5வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். 49 ரன்னில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார் அலெக்ஸ் கேரி. பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்

டிராவிஸ் ஹெட். ஹெட் 65 பந்தில் 70 ரன்கள்அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை விளாச, 50 ஓவரில் 291 ரன்களை குவித்த ஆஸி.,அணி, 292 ரன்கள் என்ற  சவாலான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!