டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்: ரன் அவுட்டிலிருந்து தப்பிய விராட் கோலி - இந்திய அணி நிதான ஆட்டம்!

By Rsiva kumarFirst Published Dec 23, 2022, 11:57 AM IST
Highlights

உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் விராட் கோலி, பந்தை அடித்துவிட்டு பாதி தூரம் வந்த நிலையில், ரிஷப் பந்த வராததால் மீண்டும் ஓடிச் சென்று தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.
 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழ்ந்த நிலையில் தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்று தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், நிலைத்து நின்று ஆடிய மோமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்தார். இதில், ஒரு சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். பந்து வீச்சில் உனட்கட் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

குடும்பத்தோடு டின்னர் சென்ற சச்சின் டெண்டுல்கர்: வைரலாகும் பிக்ஸ்!

இதையடுத்து இந்திய அணியில் கே ராகுல் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்க முதலே தடுமாறிய கே எல் ராகுல் இரண்டு முறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பினார். ஒரு முறை தவறான முறையில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட, ராகுலும் அப்பீல் செய்ய, இறுதியாக பந்து ஸ்டெம்பை விட்டு வெளியில் செல்வது தெரியவந்தது. முதல் நாள் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் சீக்கிரமாகவே முடிந்தது. இந்திய அணி முதல் நாள் முடிவில் 19 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ராகுல் 3 ரன்களும், சுப்மன் கில் 14 ரன்களும் எடுத்திருந்தனர்.

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ராகுல் கூடுதலாக 7 ரன்கள் சேர்த்த நிலையில், டைஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்றும் சுப்மன் கில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்து டைஜுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த புஜாரா மற்றும் விராட் கோலி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு வந்த புஜாரா (24 ரன்கள்) டைஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 3 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்துள்ளார்.

IPL Mini Auction 2023: சிஎஸ்கே அணியின் சிக்கல்களும் தீர்வுகளும்..! ஏலத்தில் யாரை எடுக்கும்..? ஓர் அலசல்

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 18 ரன்களும், ரிஷப் பந்த் 12 ரன்களும் எடுத்துள்ளனர். உணவு இடைவேளைக்கு முந்தை ஓவரில் கோலி பவுலர் பக்கம் அடித்துவிட்டு பாதி தூரம் ஒடி வந்து விட்டார். ஆனால், எதிர்முனையில் இருந்த ரிஷப் பந்த் வரவே இல்லை. இதனால், திரும்ப சென்று தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்ட விராட் கோலி ரிஷப் பந்தை பார்த்து முறைத்துள்ளார். அதன் பிறகு உணவு இடைவேளைக்கு செல்லும் போது இருவரும் சமாதானாமாகிக் கொண்டனர்.

click me!