SA vs IND ODI:தென் ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் – இந்தியா 296 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Dec 21, 2023, 9:38 PM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்துள்ளது.


இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது போலண்ட் பார்க் பகுதியில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியின் மூலமாக ரஜத் படிதார் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ரஜத் படிதார் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், சாய் சுதர்சன் 10 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

South Africa vs India 3rd ODI: 15ஆவது ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்து சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Tap to resize

Latest Videos

இவரை தொடர்ந்து ரஜத் படிதார் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். கேஎல் ராகுல் 21 ரன்களில் வெளியேறியதைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கி பொறுமையாக விளையாடினார். அவர் 30 ரன்களில் 7 ரன்கள் என்று நிதானமாக விளையாடி கடைசியாக ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதம் அடித்தார். அவர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிங்கு சிங் களமிறங்கினார். ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 110 பந்துகளில் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டியில் 1000 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை!

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 86* ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், மொத்தமாக 391 ரன்கள் குவித்தார். இதில், 3 அரைசதங்கள் அடங்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வரவில்லை. 2ஆவது ஒருநாள் போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

IPL Auction 2024: முதல் ஏலத்திலேயே குளறுபடியா? பஞ்சாப் கிங்ஸை ஏமாற்றிய மல்லிகா சாகர்?

கடைசியாக சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக ரிங்கு சிங் தனது அதிரடியை காட்ட இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தது.

சுற்றிலும் தண்ணீர், நடுவுல டென்னிஸ் கோர்ட் – தோனிக்கு போட்டியாக டென்னிஸ் விளையாடிய ரிஷப் பண்ட் – வைரல் வீடியோ!

click me!