ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடியால் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது இன்று 2ஆவது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி முதலில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நிதானமாக ஆரம்பித்து அதன்பிறகு அதிரடியாக விளையாடினர்.
கூடா, கேஎல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – 2ஆவது போட்டியிலேயே சதம் விளாசி சாதனை!
முதல் 6 ஓவர்களில் 36/1 ரன்கல் எடுத்திருந்த இந்திய அணி 10 ஓவர்களில் 74/1 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. இதில், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலமாக 23 வயது 307 நாட்களில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கெய்க்வாட் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 152 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி 82 ரன்கள் குவித்தனர்.
இந்திய பிளேயர்னா சும்மாவா – முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் அரைசதம் விளாசி அசத்தல்!
இறுதியாக இந்திய அணியானது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 77 ரன்களுடனும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் 234 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
CT, WTCல் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி!
இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 229/2 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று 14 சிக்ஸர்கள் விளாசி அதிக சிக்ஸர்கள் விளாசிய 2ஆவது அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 15 சிக்ஸர்கள் விளாசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.