MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • CT, WTCல் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி!

CT, WTCல் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி!

வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிச்சிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Jul 07 2024, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
T20 World Cup 2024 Trophy

T20 World Cup 2024 Trophy

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.

214
Champions Trophy 2025

Champions Trophy 2025

இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மெரைன் டிரைவ் வந்து நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.

314
World Test Championship Final 2025

World Test Championship Final 2025

கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்திற்கு வரவேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

414
CT and WTC Final 2025

CT and WTC Final 2025

இதன் காரணமாக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு சென்ற ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பாக ரூ.11 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

514
Rohit Sharma T20 Record

Rohit Sharma T20 Record

இந்த நிலையில் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியை ரோகித் சர்மா,விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு அர்ப்பணிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

614
Rohit Sharma-Virat Kohli Hug

Rohit Sharma-Virat Kohli Hug

இது குறித்து வீடியோ வெளியிட்ட ஜெய் ஷா கூறியிருப்பதாவது: வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி டிராபியை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

714
Champions 2024

Champions 2024

அதோடு, வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்படுவார். மேலும், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றிய நிலையில் அதனை ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ராகுல் டிராவிட்டிற்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

814
Rohit Sharma

Rohit Sharma

கடந்த 2021 – 2023 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

914
World Test Championship Final 2025

World Test Championship Final 2025

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான் கடந்த மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டிராபி வென்றது.

1014
Champions Trophy 2025

Champions Trophy 2025

ரோகித் சர்மா சாதனைகள்:

டி20 கிரிக்கெட் சாதனைகள்:

62 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

1114
World Test Championship 2025 Final

World Test Championship 2025 Final

டி20 உலகக் கோப்பை ரோகித் சர்மா கேப்டன்சி சாதனைகள்:

ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விளையாடிய 13 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

1214
CT and WTC 2025

CT and WTC 2025

ஒட்டுமொத்தமாக ரோகித் சர்மா கேப்டன்சி சாதனைகள்:

ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விளையாடிய 122 போட்டிகளில் 93 போட்டிகளில் வெற்றியும், 26 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.

1314
World Test Championship 2025 Final

World Test Championship 2025 Final

ரோகித் சர்மா கேப்டன்ஸி டெஸ்ட்:

16 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 10 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார்.

1414
Champions Trophy 2025

Champions Trophy 2025

ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்ஸி சாதனைகள்:

45 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 34 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மகாராஷ்டிரா
ரோகித் சர்மா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved