கூடா, கேஎல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – 2ஆவது போட்டியிலேயே சதம் விளாசி சாதனை!

By Rsiva kumar  |  First Published Jul 7, 2024, 6:08 PM IST

டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது போட்டியிலேயே சதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.


ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்தது. பார்படாஸில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 உலகக் கோப்பையில் டிராபி வென்ற நிலையில் ஒரு வாரத்திற்குள்ளாக இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்திய பிளேயர்னா சும்மாவா – முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் அரைசதம் விளாசி அசத்தல்!

Tap to resize

Latest Videos

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இணைந்து நிதானமாக தொடங்கினர். முதல் 6 ஓவர்களில் இந்திய அணியானது ஒரு விக்கெட் இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

CT, WTCல் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி!

அதன் பிறகு அபிஷேக் சர்மா அதிரடியை தொடங்கினார். அவர் 27 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச வாய்ப்பை வெல்லிங்சன் மசகட்சா தவறவிட்டார். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தான் டியான் மியர்ஸ் வீசிய 11ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 6 சிக்ஸர் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர், 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

அதன் பிறகு 13 பந்துகளில் 46 ரன்கள் குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதம் விளாசி சாதனை படைத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலமாக இந்த ஆண்டில் 47 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மாவின் 46 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார்.

T20 World Cup 2024 Champions: ரோகித் சர்மா கேப்டன்சியில் CT, WTC ஐ வெல்வோம் என்று நான் நம்புகிறேன் - ஜெய் ஷா!

இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலமாக 2ஆவது போட்டியிலே சதம் அடித்து தீபக் கூடா, கேஎல் ராகுல் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக கூடா 3ஆவது போட்டியிலும், ராகுல் 4ஆவது போட்டியிலும் சதம் விளாசியிருந்தார். மேலும், அதிவேகமாக சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக அதிவேகமாக சதம் விளாசியவர்கள்:

35 – ரோகித் சர்மா vs இலங்கை, இந்தூர், 2017

45 – சூர்யகுமார் யாதவ் vs இலங்கை, ராஜ்கோட், 2023

46 – கேஎல் ராகுல் vs வெஸ்ட் இண்டீஸ், லாடர்ஹில், 2016

46 – அபிஷேக் சர்மா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024*

click me!