மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸ் பேட்டிங்.. யுவராஜ் சிங்கின் காட்டடி..! 204 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ்

By karthikeyan VFirst Published Mar 13, 2021, 9:31 PM IST
Highlights

தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது இந்தியா லெஜண்ட்ஸ் அணி.
 

சாலை பாதுகாப்பு உலக தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் இடையேயான போட்டி ராய்ப்பூரில் நடக்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் சேவாக் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த முறை சேவாக் ஏமாற்றினாலும் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஏமாற்றவில்லை. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், 37 பந்தில் 60 ரன்களை குவித்தார். பத்ரிநாத் 42 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

4ம் வரிசையில் இறங்கிய யுவராஜ் சிங், தான் ஆடிய காலத்தில் அடித்து ஆடியதை போலவே, இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 22 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 52 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். யூசுஃப் பதான் 10 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்தார்.

சச்சின், யுவராஜ் சிங்கின் அதிரடியால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது. 205 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி விரட்டிவருகிறது.
 

click me!