Most ODI Win: அதிக ODI வெற்றி: இந்தியா நம்பர் ஒன், நியூசிலாந்து 2, ஆஸ்திரேலியா நம்பர் 8 -2023 ரீவைண்ட்!

By Rsiva kumar  |  First Published Dec 24, 2023, 11:00 AM IST

நடப்பு ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.


நடப்பு ஆண்டு இன்னும் 7 நாட்களில் முடிந்து 2024 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது இந்த 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியாவிற்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது.

பலம் வாய்ந்த அணியாக மாறிய சிஎஸ்கே – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!

Tap to resize

Latest Videos

இதே போன்று இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிகெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி வரலாறு படைத்தது. இவ்வளவு ஏன் 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் ஆஸ்திரேலியா விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் 14ல் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

PV Sindhu: உலகின் பணக்கார வீராங்கனைகளின் பட்டியலில் ரூ.60 கோடியுடன் 16ஆவது இடம் பிடித்த பிவி சிந்து!

ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் இந்தியா அதிகபட்சமாக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 27 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. நியூசிலாந்து விளையாடிய 33 ஒருநாள் போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

17 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. வங்கதேச அணி விளையாடிய 32 போட்டிகளில் 11ல் வெற்றியும், 18ல் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், 3 போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.         பாகிஸ்தான் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது.  இதில், 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

ஷாக் மேல ஷாக் கொடுக்கும் MI? மீண்டும் ரோகித் சரமா கேப்டனா? ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை!

இலங்கை விளையாடிய 31 போட்டிகளில் 16ல் வெற்றி, 15ல் தோல்வி கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா விளையாடிய 25 போட்டிகளில் 15ல் வெற்றியும் 9ல் தோல்வியும் அடங்கும். இங்கிலாந்து விளையாடிய 24 போட்டிகளில் 11ல் வெற்றி, 12ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வெற்றியோடு முடிந்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் 26ஆம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 1-1 என்று சமன் செய்தது.

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!

 

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி வெற்றி:

2003 – ஆஸ்திரேலியா – 30

2023 – இந்தியா – 27

1999 – ஆஸ்திரேலியா – 26

1996 - தென் ஆப்பிரிக்கா – 25

2000 - தென் ஆப்பிரிக்கா – 25

அணிகள் மொத்த போட்டிகள் வெற்றி தோல்வி  முடிவு இல்லை
இந்தியா 35 27 7 1
நியூசிலாந்து 33 15 17 1
வங்கதேசம் 32 11 18 3
இலங்கை 31 16 15 0
தென் ஆப்பிரிக்கா 25 16 9 0
பாகிஸ்தான் 25 14 10 1
இங்கிலாந்து 24 11 12 1
ஆஸ்திரேலியா 22 14 8  

 

click me!