இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி – அதள பாதாளத்துக்கு சென்ற இந்தியா – WTC புள்ளி பட்டியலில் சிக்கல்!

By Rsiva kumar  |  First Published Jan 29, 2024, 8:36 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 9 அணிகள் 2023 – 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தொடரில் பங்கேற்று வருகின்றன. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி 1-0 (2) மற்றும் 1-1 (2) என்று வெற்றி பெற்றிருக்கிறது.

இதையடுத்து தற்போது 3ஆவது தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரையில் இந்திய அணி விளையாடிய இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி உள்பட 5 போட்டிகளில் 2ஆவது தோல்வியை தழுவியுள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 28 ரன்களில் தோல்வியை தழுவியது.

Tap to resize

Latest Videos

இதன் மூலமாக இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 43.33 ஆக குறைந்துள்ளது. சதவிகிதத்தின் அடிப்படையில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஒவ்வொரு அணியும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் தான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தோல்வியானது இந்திய அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா 55 சதவிகித வெற்றியுடன் முதல் இடத்தில் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற நிலையில், ஆஸி, 2ஆவது போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால், இந்திய அணியானது எப்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதோ அப்போதே புள்ளிப்பட்டியலில் சரிவை சந்திக்க தொடங்கியது.

இந்த தோல்வியின் மூலமாக இந்திய அணி வெற்றி சதவிகிதத்தை இழந்து 43.33 என்ற சதவிகிதத்துடன் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 3 அணிகளும் 50 சதவிகிதத்துடன் 2, 3 மற்றும் 4ஆவது இடங்களில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!