BAN vs IND: 3 இந்திய வீரர்கள் காயத்தால் விலகல்..! கேப்டன் ரோஹித் கவலை

By karthikeyan VFirst Published Dec 8, 2022, 8:20 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலிருந்து 3 இந்திய வீரர்கள் விலகிய நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று இந்திய அணி தொடரை இழந்துவிட்டது.

முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் என நூழிலையில் வெற்றியை இழந்தது.  அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோற்றது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவன் ODI கிரிக்கெட்டில் என்னத்த சாதிச்சான்னு அவனை டீம்ல எடுத்தீங்க..? இந்திய அணி தேர்வை விளாசிய முன்னாள் வீரர்

இந்திய அணி கோர் டீமை உறுதிப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடாமல், ரஜத் பட்டிதர், ராகுல் திரிபாதி ஆகிய ஒருநாள் ஃபார்மட்டில் இதுவரை இல்லாத வீரர்களை அணியில் எடுக்கிறது. 2019 ஒருநாள் உலக கோப்பைக்கு முன் செய்ததை போன்ற, பரிசோதனை செய்வதாக நினைத்து அதே தவறை இப்போதும் செய்துவருகிறது. ஏற்கனவே ஒருநாள் ஃபார்மட்டில் ஆடிவரும் கில், சாம்சன் மாதிரியான வீரர்களை வங்கதேச தொடரில் ஓரங்கட்டியது.

இது போதாதென்று காயங்கள் பெரிய பிரச்னையாக அமைந்துள்ளது. டி20 உலக கோப்பையில், பும்ரா, ஜடேஜா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் ஆடாததுதான் பெரிய பிரச்னையாக அமைந்தது. இந்நிலையில், இப்போது ரோஹித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகிய 3 வீரர்களும் காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

தீபக் சாஹர் அடிக்கடி காயமடைகிறார். அவரது ஃபிட்னெஸ் எப்போதுமே கேள்விக்குள்ளானதாக உள்ளது. ரோஹித் சர்மா கை கட்டைவிரலில் காயமடைந்தார். முதல் போட்டியில் ஆடிய இளம் ஃபாஸ்ட் பவுலர் குல்தீப் சென்னும் காயத்தால் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இப்படியாக ஒரே நேரத்தில் 3 வீரர்கள் காயத்தால் விலகுவது பெரிய பின்னடைவு.

பேட்டிங் ஆட முடியும்னா, ஏன் முன்னாடியே இறங்கல..? ரோஹித்தை விளாசிய கவாஸ்கர்

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்திய அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. எதனால் அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை அதிகமான போட்டிகளில் ஆடுவதால் காயங்கள் ஏற்படலாம். வீரர்களின் ஃபிட்னெஸை கண்காணிப்பது அவசியம். நாட்டிற்காக ஆடும்போது வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும்.  வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

click me!