முகேஷ் குமார், ஆவேஷ் கான் வேகத்தில் மளமளவென சரிந்த ஜிம்பாப்வே – பதிலுக்கு பதில் கொடுத்து இந்தியா வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jul 7, 2024, 8:06 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது இன்று 2ஆவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100, ருதுராஜ் கெய்க்வாட் 77* மற்றும் ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர்.

சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா, வானவேடிக்கை காட்டிய ரிங்கு சிங் – இந்தியா 234 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் இன்னசெண்ட் கையா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். டியான் மியார்ஸ் 0 ரன்னிலும், கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களது வரிசையில் அடுத்து வந்த ஜோனாதன் காம்ப்பெல் 10 ரன்கள் எடுத்தார். கிளைவ் மடண்டே 0, வெல்லிங்டன் மசகட்சா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் வெஸ்லி மதேவெரே 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கூடா, கேஎல் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – 2ஆவது போட்டியிலேயே சதம் விளாசி சாதனை!

கடைசியில் வந்த பிளெஸிங் முசரபாணி 2 ரன்னில் வெளியேறவே, லூக் ஜாங்வே 33 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதன் மூலமாக ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்திய பிளேயர்னா சும்மாவா – முதல் போட்டியில் 0, 2ஆவது போட்டியில் அரைசதம் விளாசி அசத்தல்!

ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி வரும் 10 ஆம் தேதி ஹராரேயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள். ஒரு கேப்டனாக சுப்மன் கில் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!