WI vs IND ODI Series: 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 13 ஆவது முறையாக தொடரை கைப்பற்றி சாதனை!

By Rsiva kumar  |  First Published Aug 2, 2023, 9:59 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நேற்று டாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் விளையாடியது. இதில், தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள்.. அறிவிக்கப்பட்ட இந்திய கால்பந்தாட்ட அணி - களமிறங்கும் தமிழக வீரர் சிவசக்தி!

Tap to resize

Latest Videos

இஷான் கிஷான் 9 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோட்டைவிட்டார். இதன் பலனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே சீசனில் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார். எனினும் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 64 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

WI vs IND 3rd ODI: இஷான் கிஷான், கில், ஹர்திக் பாண்டியா அதிரடி; இந்தியா 351 ரன்கள் குவிப்பு!

அதன் பிறகு வந்த ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசியாக வாய்ப்பாக இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர், கடந்த போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2ஆவது பந்திலேயே அசால்டாக சிக்ஸர் அடித்தார். அவர் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் பொறுமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 85 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

WI vs IND ODI:அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன்: ஒரு ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2ஆவது அரைசதம்!

இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். ஆரம்பித்தில் நிதானமாக ஆடி வந்த அவர் அதன் பிறகு அதிரடியாக விளையாடினார். ஒருபுறம் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழக்க ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இறுதியாக பாண்டியா 70 ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது.

ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஜடேஜா 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக யாரும் 100 ரன்கள் எடுக்காமல் இந்திய அணி அதிகபட்சமாக 351 ரன்கள் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக 350 ரன்கள் எடுத்திருந்தது.

WI vs IND 3rd ODI: சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த இஷான் கிஷான்: 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் அரைசதம்!

இதையடுத்து கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் டக் அவுட்டில் முகேஷ் குமார் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 4 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஷாய் ஹோப் 5, கீசி கார்டி 6, ஷிம்ரான் ஹெட்மயர் 4, ரொமாரியோ ஷெப்பர்டு 8 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அலிக் அதானாஸ் 32 ரன்களும், அல்சாரி ஜோசபர் 26 ரன்களும் எடுத்தனர். கடைசியாக மோத்தி 39 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து 200 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வி அடைந்தது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?

இந்த தோல்வியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்று இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து ஒரு நாள் தொடரை 13 முறை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 153, 160, 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2  விக்கெட்டுகளும், ஜெயதேவ் உனத்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

click me!