மகளிர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! ஆட்டநாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ்

Published : Oct 01, 2022, 06:31 PM IST
மகளிர் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! ஆட்டநாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ்

சுருக்கம்

மகளிர் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.  

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இன்று முதல் மகளிர் ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்கின. 

இந்திய மகளிர் அணி இன்றைய முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - PAK vs ENG: அம்பயரை பதம்பார்த்த ஹைதர் அலியின் ஷாட்..! வைரல் வீடியோ

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தயாளன் ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஸ்னே ராணா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ரேணுகா சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் 3ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஜெமிமா, 53 பந்துகளில் 11 பவுண்டரிகள்  மற்றும் ஒரு சிக்ஸருடன் 76 ரன்களை குவித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 33 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு..! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியை இந்திய வீராங்கனைகள் வெறும் 110 ரன்களுக்கு சுருட்டி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தயாளன் ஹேமலதா  அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும்,  பூஜா வஸ்ட்ராகர் மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!