ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடந்தது. இதில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார். முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும் எடுத்தனர்.
இதில் இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் சொதப்பி விட்டனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினார். இதில், இஷான் கிஷான் 37 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், 39 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் தன் பங்கிற்கு 29 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அடுத்து அந்த திலக் வர்மா 12 ரன்கள் நடையை கட்டினார். தொடர்ந்து விளையாடிய கேப்டன் 42 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த அக்ஷர் படேல் 2, ரவி பிஷ்னோய் 0 அர்ஷ்தீப் சிங் 0, என்று அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இறுதியாக கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் இந்தியா வெற்றி என்ற நிலை இருந்தது. ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தாலும் சீன் அபாட் கடைசி பந்தை நோபாக வீசியதன் மூலமகாக இந்தியா 19.5 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி வரும் 26ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
போன வாரம் தான அடி வாங்குனேன் – திரும்ப திரும்ப அடிக்கும் ஆஸி – ஆஸ்திரேலியா 208 ரன்கள் குவிப்பு!