இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் அறிவிப்பு, டே நைட் மேட்ச் உண்டு!

By Rsiva kumarFirst Published Mar 26, 2024, 4:01 PM IST
Highlights

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக பார்டர் டிராபி தொடர் நடத்தப்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசியாக கடந்த ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா 2-1 என்று டிராபியை கைப்பற்றியது. இதன் மூலமாக இந்தியா தொடர்ந்து 4 முறை பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைக்குமா சிஎஸ்கே?

இந்த நிலையில் தான் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி உள்பட மொத்தமாக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

IPL 2023 Final, CSK Champions: ஜடேஜாவை கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள் – 2023 ஐபிஎல் ஃபைனல் ரீவைண்ட்!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024 -25

நவம்பர் 22 – 26: ஆஸ்திரேலியா – இந்தியா – முதல் டெஸ்ட் – பெர்த் – காலை 7.50 மணி

டிசம்பர் 06 – 10: ஆஸ்திரேலியா – இந்தியா – 2ஆவது டெஸ்ட் – அடிலெய்டு – காலை 9.30 மணி (பகல்/இரவு டெஸ்ட்)

டிசம்பர் 14 – 18: ஆஸ்திரேலியா – இந்தியா – 3ஆவது டெஸ்ட் – பிரிஸ்பேன் – காலை 5 மணி

டிசம்பர் 26 – 30: ஆஸ்திரேலியா – இந்தியா – 4ஆவது டெஸ்ட் – மெல்போர்ன் – காலை 5 மணி

ஜனவரி 03 – 07 - ஆஸ்திரேலியா – இந்தியா – 5ஆவது டெஸ்ட் – சிட்னி – காலை 5 மணி.

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை: யாருக்கு சாதகம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி, 2ல் தோல்வி அடைந்ததோடு, ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. இதன் மூலமாக மொத்தமாக 74 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, விளையாடிய 12 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று 3ல் தோல்வி அடைந்துள்ளது. அதோடு சதவிகிதத்தின்படி 68.51 என்று முன்னிலையில் இருக்கிறது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ள நிலையில் 90 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திலுள்ளது. நியூசிலாந்து 3ஆவது இடமும், பாகிஸ்தான் 4ஆவது இடமும் பிடித்துள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4-1 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SCHEDULE OF INDIA vs AUSTRALIA TEST SERIES.....!!!!! 🔥

Nov 22-26: Perth Stadium
Dec 6-10 : Adelaide Oval [D/N]
Dec 14-18: The Gabba
Dec 26-30: MCG
Jan 3-7: SCG

Tickets will be available from June 4th. pic.twitter.com/qTDbujC6DA

— Johns. (@CricCrazyJohns)

 

click me!