குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைக்குமா சிஎஸ்கே?

By Rsiva kumarFirst Published Mar 26, 2024, 2:51 PM IST
Highlights

இதுவரையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சிஎஸ்ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையில் சிஎஸ்கே அணியானது முதல் போட்டியில் ஆர்சிபியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியைத் தொடர்ந்து சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கு முன்னதாக, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

மேலும் இதுவரையில் நடந்த லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே அணி தோற்கடிக்கவில்லை. இன்று நடக்கும் 7ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்தி புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 65 போட்டிகளில் சிஎஸ்கே 46 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தின் சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர் 246/5 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2010). குறைந்தபட்ச ஸ்கோர் 109 vs மும்பை இந்தியன்ஸ் (2019).

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட் – 5 இன்னிங்ஸ் – 304 ரன்கள் – அதிகபட்சம் 92 ரன்கள்

விருத்திமான் சகா – 5 இன்னிங்ஸ் – 169 ரன்கள் – அதிகபட்சம் 67* ரன்கள்

சுப்மன் கில் – 5 இன்னிங்ஸ் – 162 ரன்கள் – அதிகபட்சம் 63 ரன்கள்

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

முகமது ஷமி – 5 இன்னிங்ஸ் – 7 விக்கெட்டுகள் – பெஸ்ட் 2/19

மதீஷா பதிரனா – 3 இன்னிங்ஸ் – 6 விக்கெட்டுகள் – 2/24

அல்ஜாரி ஜோசஃப் (ஜிடி) – 3 இன்னிங்ஸ் – 5 விக்கெட்டுகள் – 2/33

click me!